ஃபிபா 2018 இன்று: எகிப்து-உருகுவே, மொராக்கோ-ஈரான் அணிகள் பலப்பரீட்சை

மாஸ்கோ:

ரஷ்யாவில் நேற்று தொடங்கிய உலக கோப்பை கால்பந்து (ஃபிபா 2018) போட்டிகளின் 2ம் நாளான இன்று எகிப்து&உருகுவே அணிகள் மோதுகின்றன. எக்டேரின்பர்க் அரினாவில் இந்த போட்டி நடக்கிறது. இது குறித்து க்யூபர் கூறுகையில்,‘‘இந்த போட்டியை தொடங்கி அனைவரும் ஆர்வமாக இருக்கின்றனர். நாங்கள் வெற்றி பெறுவதற்கான அனைத்து ஊக்குவிப்புகளும் எங்களுக்கு கிடைத்திருப்பதால் வெற்றி சாத்தியமாகும்’’ என்றார்.

மற்றொரு போட்டியில் மொராக்கோ&ஈரான் அணிகள் மோதுகின்றன. இது செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் நடக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு மொராக்கோவின் தேசியக் கொடி உலக கோப்பையின் இறுதி போட்டியில் சுடர் விட்டு பெருமையுடன் பறந்ததை நினைவுக் கூற வேண்டிய நேரம் வந்துள்ளது. ரஷ்யாவில் நாங்கள் சிறந்து விளங்குவோம் என்று மொராக்கோ பயிற்சியாளர் ஹெர்வே ரெனார்டு தெரிவித்துள்ளார்.