அஜித்தின் “விஸ்வாசம்” படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

ஜித் நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்படுள்ளது.

அஜித்துடன் இயக்குநர் சிவா விஸ்வாசம் படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்துள்ளனர்.  . இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர்  நவம்பர் 27 ஆம் தேதி வெளியிட்டப்பட்டது.

இதையடுத்து அடிச்சு தூக்கு  என்ற பாடல் வெளியானது. குத்துப்பாடலான இது  ரசிகர்களிடையே  பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடலான, வேட்டிகட்டு எனும் பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டிருக்கிறது.  இந்தப் பாடல் வெளியான சிறிது நேரத்திலேயே ட்விட்டர் ட்ரெண்டிங்கில் சென்னை மற்றும் இந்திய அளவில் முதலிடததைப் பிடித்துவிட்டது.

விஸ்வாசம் படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். நயன்தாரா,   இதற்கிடையே அஜித் நடிப்பில் சதுரங்கவேட்டை இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் துவங்கியது. இந்தப்படம் அடுத்த ( 2019) ஆண்டு  மே1ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இதைத்தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படம் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியாகும்.