அஜித் குமார் படத்தில் கதாநாயகியாகும் பிரியதர்ஷன் மகள்

சென்னை

ஜித்குமாரின் அடுத்த படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.

அஜித்குமார் நடிக்க உள்ள அடுத்த படத்தை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார்.  சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய  படங்களின் இயக்குனரான வினோத் இயக்கத்தில் இந்தப் படம் உருவாக உள்ளது.    இந்த படம் அமிதாப் பச்சன் நடித்த பிங்க் இந்திப்படத்தின் தமிழாக்கம் ஆகும்.

இந்த படத்தின் இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா ஏற்றுக் கொண்டுள்ளார்.   படத்தில் உள்ள மூன்று கதாநாயகிகளில் ஒருவராக கல்யாணி பிர்யதர்ஷன் நடிக்கிறார்.,   இவர் தமிழ், மலையாளம், இந்தி என பல மொழிகளில் புகழ்பெற்ற இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார்.

கல்யாணி தெலுங்குப் படமான ஹலோ என்னும் படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தார்.   பல மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் கல்யாணி பிரியதர்ஷன் துல்கர் சல்மான் ஜோடியாக வான் என்னும் தமிழ்ப் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவருடைய தாயார் லிசியும் ஒரு நடிகை ஆவார்.   கமலஹாசனுடன் விக்ரம் என்னும் படத்தில் லிசி நாயகியாக நடித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி