அஜீத்தை கலாய்க்கும் விஜய் ரசிகர்கள்!

PZXgMA1C

ஜீத்தின் வேதாளம் டீசரை இதுவரை 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்த்திருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைகிறது வேதாளம் டீம். அந்த ஜோரிலேயே வரும் 16ம் தேதி (வெள்ளிக்கிழமை) இசை வெளியீடு என்றும் உற்சாகமாக அறிவித்துள்ளது.

இன்னொருபக்கம், வேதாளம் டீசரை கிண்டிக் கிழங்கெடுக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

இயக்குநர் பாலாவின் “நான் கடவுள்” படத்துக்கு முதலில் அஜித்தைத்தான் பிக்ஸ் செய்யப்பட்டார். பாலா ரொம்பநாள் இழுக்கவே, அஜித் அடுத்தபடத்தில் கமிட் ஆகிவிட்டார்.

இந்த பஞ்சாயத்தில், ஓட்டல் அறைக்குள் வைத்து அஜித் மிரட்டப்பட்டதாகவும், பெரும் தொகை கொடுத்த பிறகே அஜீத் விடுவைக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் அப்போது பரவியது.

இது நடந்த பலகாலம் ஆகிவிட்டது. ஆனால் இதை அஜீத், பாலா ஆகியோர் மறந்தாலும் விஜய் ரசிகர்கள் மறக்கமாட்டார்கள் போலிருக்கிறது.

 

cartoon2

அஜீத்தின் புதிய படமான வேதாளம் டீசரில் “அஜித் ஓடி ஒளியுற ஆள் இல்ல தேடி அடிக்குற ஆளு” என்கிற வசனம் வருகிறது.

இந்த வசனத்தை அஜீ்த் பேசுவதாக ஒரு படத்தையும், பக்கத்திலேயே டைரக்டர் பாலா, “ நான் அவன இருட்டு ரூமுக்குள்ள வச்சு அடிச்ச ஆளு” என்று சொல்வது போலவும் படத்தை போட்டோஷாப் செய்து பரவவிட்டிருக்கிறார்கள்.

விஜய் – அஜீத் இருவரும் இணைந்து நடித்தாலும் அவர்களது வாரிசுகள் எதிரும் புதிருமாக அடித்துக்கொண்டுதான் இருப்பார்கள் போலிருக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published.