அஜீ்த் ரசிகர்களை கொதிக்க வைத்த வீடியோ! காவல்துறையில் புகார் அளிக்கவும் முடிவு!

 

vv

 

ஜீத்தின் மைத்துனி, விஜய் ரசிகை, அஜீத்தின் வேதாளம் டீசரை விஜய் பாராட்டினார்.. என்றெல்லாம் செய்திகள் வருகின்றன.

ஆனால் அஜீத் – விஜய் ரசிகர்களுக்குள்ளான மோதம் நின்றபாடில்லை.  இரு தரப்புமே அடுத்தவரை ஓவராக கலாய்க்கிறார்கள்.  விஜய்யின் புலி படம் வெளியான போது,  அஜீத் ரசிகர்கள் ஓவரிலும் ஓவராக போட்டுத்தாக்க.. போலீசில் கம்ப்ளைண்ட் கொடுத்துவிட்டார்கள் விஜய் ரசிகர்கள்.

இந்த மாதம் முதல்வாரம்,  கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்  மாநகர போலீஸ்  கமிஷனர்  விஸ்வநாதனிடம், “புலி படத்தின் திருட்டு டி.வி.டி. விற்பனையை தடுக்க வேண்டும் என்றும், சமூகவலைதளங்களில் விஜய்யை மோசமான முறையில் சித்தரிக்கிறர்கள் எனவும் புகார் கொடுத்தார்கள்.

இதையடுத்து  குமரி மேற்கு மாவட்ட தலைமை விஜய் நற்பணி இயக்க தலைவர் ஜோஸ்பிரபு தலைமையில் கிழக்கு மாவட்ட தலைவர் சகாயம் உட்பட பலரும்,  அம்மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  புகார் கொடுத்தார்கள். அதில் சமூவலைதளங்களில் விஜய் பற்றி வரும் மோசமான பதிவுகள்,  கிராபிக்ஸ் படங்கள் குறித்து குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக மதுரை மாவட்ட புறநகர் விஜய் ரசிகர் மன்ற பிரமுகர்கள் இன்பராஜ், தங்கபாண்டி தலைமையில் , மதுரை போலீஸ் கமிஷனரிடம்  இதே பாணியில் புகார் அளித்தார்கள்.

இப்போது  அஜீத் ரசிகர்கள் புகார் கொடுக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.

அஜீத்தின் வேதாளம் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதை பல லட்சம் பேர் பார்த்துவிட்டார்கள் என்று உற்சாகமாக சொல்லிக்கொண்டிருக்கிறது வேதாளம் டீம்.

அதே நேரம் இந்த டீசரை வைத்து காமெடி என்ற பெயரில் ரொம்பவே  கிண்டலடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். அதிலும், வடிவேலுவை வைத்து கிண்டல் செய்யப்பட்ட வீடியோ அஜீத் ரசிகர்களை மிகவும் ஆத்திரமூட்டியிருக்கிறது.   இது யூடியூபில் புயல் வேகத்தில் பரவி வருகிறது. இது போன்ற வீடியோக்களை தடுக்க திட்டமிட்டுள்ளனர் அஜீத் ரசிகர்கள்.

ஆகவே அந்தந்த மாவட்ட அஜீத் மன்றத்தினர், அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். அதிலும் ஒரே நாளில் தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் புகார் அளிக்க திட்டமாம்!

அஜீத் ரசிகர்களை கொதிக்கவைத்த வீடியோ லிங்க்:

 

 

கார்ட்டூன் கேலரி