அடங்காத அஜித்!

y

 

ஜித்தின் புதிய படத்துக்கு பெயர் வைக்காமல், “தல 56” என்றே அழைத்து வந்தார்கள்.  சிவா இயக்கும் இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், லக்ஷ்மி மேனன், மற்றும் பலர் நடிக்க.. அனிருத் இசை அமைக்கிறார்.

இந்த படத்தின்  படப்பிடிப்பு சென்னை பின்னிமில்லில் நடந்து வருகிறது. இப்போது  கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு நடப்பதகாகவும், ஒரு வாரம் இங்கேயே படப்பிடிப்பு நடக்கும் என்றும் படக்குழு அறிவித்தது.

அடுத்ததாக  ஸ்ருதி ஹாசன், லக்ஷ்மி மேனன் சம்பந்தப்பட்ட சில காட்சிகளும் இங்கு படமாக்கப்படுமாம்.  அத்துடன் படப்பிடிப்பு இனிதே நிறைவுறுகிறது.

ஆனால், ஷூட்டிங் முடிவதற்குள் மொத்த ஏரியாவும் விற்றுவிட்டது. இதன் பிறகும் படத்துக்கு பெயர் வைக்காமல் இருக்கிறோமே என்று ஃபீல் பண்ணியிருப்பார்கள் போலிருக்கிறது… “அடங்காதவன்” என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

அப்பாடா.. அஜித் ரசிகர்களுக்கு முக்கிய செய்தி சொல்லியாச்சு!

5 thoughts on “அடங்காத அஜித்!

Leave a Reply

Your email address will not be published.