அதிமுக கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 தொகுதிகள்

thaniyarasu

அதிமுக பொதுச் செயலாளர், முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில் கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, டாக்டர் செ.ழு. தமிழரசன் (இந்திய குடியரசுக் கட்சி) மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியிலும், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவன அமைப்பாளர் உ. தனியரசு காங்கேயம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு நாகப்பட்டினம் மற்றும் ஒட்டன்சத்திரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் கடையநல்லூர் தொகுதியிலும், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத் தலைவர் எஸ். கருணாஸ் திருவாடானை தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

You may have missed