அதிமுக கூட்டணியில் போட்டியிடும் சரத்குமாரை ஆதரித்து ராதிகா 15 முதல் பிரசாரம்

rathika1

நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரை ஆதரித்து அக்கட்சியின் மாநில மகளிரணிச் செயலாளர் ராதிகா சரத்குமார் வருகிற 15 முதல் 17 தேதி வரை மேற்கொள்ள உள்ளார்.

அதன்படி முதல்கட்டமாக வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட உடன்குடி ஒன்றியத்தில் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றும், ஆழ்வார் திருநகர் ஒன்றியத்தில் 16 ஆம் தேதி சனிக்கிழமை அன்றும், திருச்செந்தூர் ஒன்றியம் மற்றும் காயல்பட்டினம் நகரப் பகுதிகளில் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்றும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி