Netizen

Tharasu Shyam

பாரதிய ஜனதாவுடன் அதிமுக கூட்டணி அமைப்பது ஏற்கனவே இருக்கும் தோழமைக் கட்சிகள் மத்தியில் பெரிய கோபத்தை விதைத்துள்ளது.

கருணாஸ், தனியரசு,  அன்சாரி ஆகிய மூவரும் பாரதிய ஜனதா கூட்டணியை எதிர்க்கிறார்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோருக்கு என்றென்றும் ஆதரவாக இருந்த சிறுபான்மை யினர் பாரதிய ஜனதா கூட்டணிக்கு பெரிய அளவுக்கு எதிர்ப்பை தெரிவிப்பார்கள் பல்வேறு தொகுதிகளில் டெபாசிட் கூட பறிபோகும் என்று விரிவான கட்டுரையை டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டு உள்ளது.

இலங்கை அசின் போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் சபையில் முறையிட வேண்டும் என்ற ஜெயலலிதாவின் தமிழக சட்டமன்றத் தீர்மானத்தை அலட்சியம் செய்தது பா ஜ அரசு அம்மாவின் அரசு என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சி இப்போது பா ஜவோடு கூட்டணி சேர்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

தமிழகத்தில் வாட்டி வரும் எந்த பிரச்சனைக்கும் பாரதிய ஜனதா அரசு தீர்வு காணவில்லை குறைந்தபட்ச உத்திரவாதம் கூட இல்லாமல் பிஜேபியுடன் கூட்டணி சேருவது என்பது தற்கொலைதான் மோடியா லேடியா என்று கேட்டு ஜெயலலிதா 37 எம்பிக்களை வெற்றி பெறச் செய்தார்.

கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் ஒருமுறைகூட தமிழகத்திற்கு வரவில்லை ஆனால் ஓட்டு கேட்கவும் கூட்டணி நிர்பந்தம் செய்யவும் 3முறை வந்து விட்டார் மக்கள் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

அண்ணா திமுக பாரதிய ஜனதா கூட்டணி தோற்றுப்போகும் பல தொகுதிகளில் டெபாசிட் பறிகொடுக்கும் இவையே தனியரசு அன்சாரி கருணாஸ் ஆகியோரின் கருத்துகள்.