அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய அரட்டை பேச்சு?

sasiksala pushpa

அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா, தனது ஆண் நண்பருடன் பேசிய அரட்டை பேச்சு என வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் வெளியான அவர்களின் பேச்சு:

பெண் குரல் .: ஹலோ டேய். இப்பதான் பாத்தேன் மெசேஜ் (பலமாக சிரிக்கிறார்).
ஆண் குரல்: நேத்து நைட் போனை டக்குனு வச்சுட்ட.
பெண் குரல்: உனக்கு தெரியுமா விஷயம்… நேற்று நைட்டு புல் மப்பு (சிரிக்கிறார்).
ஆண் குரல்: அடிச்சு புரண்டு, பயந்த மாதிரி வச்சிட்டு ஓடியே போய்ட்டியே.
பெண் குரல்: அந்த சமயத்துல நான் ஏதாவது உளறிருந்தேன்னு வச்சுக்க.
இந்த டெல்லி குளிருல என்ன பண்றது? நேத்து பிரண்ட்ஸ் கூட சேந்து அடிச்சுட்டேன். உடனே உன் ஞாபகம் வந்துச்சு. உனக்கு போன் போட்டேன். அப்புறம் சரின்னு வச்சுட்டேன்.
ஆண் குரல்: இனி தூத்துக்குடிக்கு எப்போ?
பெண் குரல்: எப்போன்னு தெரியல. ஏன்?

– இப்படி போகிறது அந்த உரையாடல்.

இந்த உரையாடலில் வரும் பெண் குரல், அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.யான சசிகலா புஷ்பாதான் என்று வாட்ஸ்அப்பில் தகவல்கள் உலவுகின்றன. நுனி நாக்கு ஆங்கிலத்தில் ராஜ்யசபா விவாதங்களில் பங்கெடுத்தவர், ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனங்களில் மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பவர் என அ.தி.மு.க.வினரால் வர்ணிக்கப்படுபவர் சசிகலா புஷ்பா.  இவர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டபோது இவரது வயது குறித்தும் கல்வி குறித்தும்  சர்ச்சை எழுந்தது.

மேற்கண்ட ஆடியோ விவகாரம் பற்றி சசிகலா புஷ்பாவின் கருத்தை அறிய அவரது செல்போன் என்னில் தொடர்புகொண்டோம். அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ்அப்பில உலவும் அந்த ஆடியோ..

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: அதிமுக சசிகலா புஷ்பா வாட்ஸ் அப் செல்போன் ராஜா
-=-