dmk
 
டந்த டிசம்பர் 31ம் தேதி, சென்னை திருவான்மியூரில் நடந்த அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை முன்னிட்டு சென்னை முழுதும் அனுமதி இன்றி பல நூறு  பேனர்கள்  அ.தி.மு.கவினரால் வைக்கப்பட்டன.   போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இந்த பேனர்கள் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஆனாலும் பொதுமக்கள் முணுமுணுப்புடன் கடக்க…  “அறப்போர் இயக்க”த்தைச் சேர்ந்த சந்திர மோகன் உட்பட மூவர்,  அனுமதியற்றப பேனர்களை எடுக்குமாறு, காவல்துறையில் புகார் கொடுத்தனர். நடவடிக்கை ஏதும் இல்லாததால், பேனர்களை தாங்களாகவே அகற்ற முற்பட்டனர். இதனால் அ.தி.மு.கவால் தாக்கப்பட்டனர். மேலும் இவர்கள் மீது “பொது சொத்தை சேதப்படுத்தியதாக” வழக்கு பதிவு செய்து சிறைக்கு அனுப்பியது காவல்துறை.
இதை அரசியல் கட்சிகள் பலவும் கண்டித்தன. குறிப்பாக தி.மு.க. தலைவர் கருணாநிதியும், பொருளாளர் மு.க.ஸ்டாலினும் கடுமையாக கண்டித்தனர். அதோடு, “தி.மு.க. சார்பில் இப்படி அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்படாது” என்றும் சொல்லப்பட்டது.
இதற்கிடையே, கடந்த 24ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முதல்வருான ஜெயலலிதாவின் பிறந்தநாள் வந்தது. அப்போதும் அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டன.
 

அதே இடத்தில் ஜெ. பிறந்தநாளுககு அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்
அதே இடத்தில் ஜெ. பிறந்தநாளுககு அனுமதி இன்றி வைக்கப்பட்ட பேனர்

அதில் ஒன்று,  சென்னை அடையாறு – சாஸ்திரி நகர் சிக்னல் அருகே வைக்கப்பட்ட பிரம்மாண்டமான பேனர்.  அனுமதி இன்றி வைக்கப்பட்ட இந்த பேனர் பற்றி நமது patrikai.com  இதழில் புகைப்படத்துடன்  செய்தி வெளியிட்டோம்.
இப்போது அதே இடத்தில் அதே சைசில் பிரம்மாண்டமாக நிற்கிறது தி.மு.க பேனர். இன்று (மார்ச் 1) தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் அல்லவா?
“அனுமதி இன்றி பேனர்கள் வைக்கமாட்டோம்” என்ற தி.மு.கவின் வாக்குறுதி காற்றோடு பறந்துவிட்டது.
புதுமைகளை நாடும் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாள் அன்று அனுமதி இன்றி வைக்கப்பட்ட இந்த பேனரை அகற்றி புதுமை படைப்பாரா…?
அல்லது “அ.தி.மு.கவும் தி.மு.கவும் ஒண்ணு…” என்ற மக்களின் எண்ணத்தை உறுதிப்படுத்துவாரா?