“அந்த” விஷயத்தில் இந்தியர்களுக்கு மூன்றாவது இடமாம்!

1

டுத்த, எடுக்கப்படாத “தேர்தல் கருத்துக்கணிப்புகளால்” இங்கே சர்ச்சை எழுந்துகொண்டிருக்கிறது.  இந்த நிலையில் “போர்ண் ஹப்” எனும் பிரபல இணையதளம்  முக்கியமான கருத்து கணிப்பு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது.

அப்படி என்ன அதிமுக்கிய கருத்துகணிப்பு என்கிறீர்களா?

உலக அளவில்  எந்த நாட்டினர் அதிகமாக “அந்த”மாதிரி படங்களை.. அதான், நீலப்படங்களை.. விரும்பிப் பார்க்கிறார்கள் என்பதுதான் அந்த கருத்து கணிப்பு!

இந்த கருத்து கணிப்பின்  முடிவு என்ன சொல்கிறது தெரியுமா?

நீல படங்கள் பார்ப்பதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள்! அடுத்த இடத்தில் இருப்பவர்கள்  இங்கிலாந்து ஆசாமிகள்! அதற்கு அடுத்த இடத்தைப் பிடித்து மானத்தைக் காப்பாற்றியிருப்பவர்கள், நம்ம இண்டியன்ஸ்!

இன்னும் சில சுவாரஸ்யமான செய்திகள்…

ஒட்டுமொத்தமாக  நோக்கினால்,  முதல் இருபது இடங்கள் பிடித்திருப்பதில் 11 நாடுகள், ஐரோப்பிய நாடுகள்!

கடந்த 2014 ஆம் ஆண்டைவிட, இப்போது ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் நீலப்படங்களைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

உலகளவில் பிலிப்பைன்ஸ் நாட்டு மக்களே மிகவும் அதிகப்படியாக நாளொன்றுக்கு சுமார் 13 நிமிட நேரம் இதற்காக செலவிடுகிறார்கள்.  கியூபா நாட்டு மக்கள் மிகக் குறைவாக ஐந்தரை நிமிடங்கள் செலவு செய்கிறார்கள்.

இரவு 11 மணி முதல் நள்ளிரவு முடியும் வரையிலான இரண்டு மணிநேரத்தில்தான்  அதிகமானவர்கள் நீலப்படங்களை பார்க்கிறார்கள்.

அதிகமான பெண்கள் நீலப்படம் பார்க்கும் நாடு, ஜமைக்கா. இங்கு 44 சதவீதம்  பெண்கள் இந்தமாதிரி படங்களை பார்க்கிறார்கள்.

நீலப்படம் பார்ப்பவர்களில் அதிகமானோர், 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள்.

ஸ்மார்ட் ஃபோன் மூலம் 53% பேர் நீலப்படங்களைப் பார்க்கிறார்கள்.

“இந்த கருத்து கணிப்பின் தகவல்கள் சில நம்புற மாதிரி இல்லையே..” என்கிறீர்களா..  கவலையை விடுங்க பாஸ்.. கருத்து கணிப்பு அப்படிங்கிறது, படிக்க சுவாரஸ்யமா இருக்கான்னு பார்க்கணும்..அவ்வளவுதான்.. அது அரசியல் கருத்துக்கணிப்பானாலும் சரி, வேறயா இருந்தாலும் சரி!

Leave a Reply

Your email address will not be published.