அனுஷ்கா, தமன்னா அவுட்!: வாட்ஸ்அப் வதந்தி!

s-img-2015-11-13-1447420744-prabhasfiance--600

 

திரி புதிரியாய் ஓடி, இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த பாகுபலி படத்தின் நாயகன் பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று தகவல் பரவியது. இருவரும் இது குறித்து கருத்து சொல்லவில்லை. அதே போல் பிரபாஸுக்கும் தமன்னாவுக்கு காதல் என்றும் சொல்லப்பட்டது. இது பற்றியும் இவர்கள் வாய்ஸ் ஏதும் கொடுக்கவில்லை.

 

Baahubali-Audio-Launch-Photos-06

இந்த நிலையில் “பிரபாஸ் வைத்த காதல் டெஸ்டில்(!) அனுஷ்காவும், தமன்னாவும் அவுட் ஆகிவிட்டார்கள். இந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்” என்று ஒரு பெண்ணின் படத்துடன் வாட்ஸ்அப்பில் பரபரப்பாக ஒரு பதிவு பரவி வருகிறது.

 

 

1419832221_prabhas-2

 

இது தெலுங்கு திரை உலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே வாட்ஸ்அப்பில் பகிரப்பட்ட பெண்ணின் படம் பற்றி விசாரணை துவங்கியது. அவர் கோதாவரியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான பிரியா லால் என்பவர் என்று தெரியவந்தது.

அந்த பெண்ணுக்கும் பிரபாஸுக்கும் எந்த தொடர்பும் இல்லை. சும்மா பரபரப்புக்காக இப்படி பரப்பியிருக்கிறார்கள் வாட்ஸ்அப் வதந்தியாளர்கள்!

அடப் பாவிகளா!

Leave a Reply

Your email address will not be published.