அன்புக் கூட்டணியை இன்னும் தொடரும் அர்ச்சனா

சென்னை

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் தனது அன்புக் கூட்டணியை அர்ச்சனா தொடர்ந்து வருகிறார்.

விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் தற்போது 9 போட்டியாளர்கள் உள்ளனர்.  ஏற்கனவே பிக் பாஸ் வீட்டினுள் அர்ச்சனா தலைமையில் அன்புக் கூட்டணி என ஒரு கூட்டணி உருவானது.  இந்த கூட்டணியில் அர்ச்சனாவுடன், ரியோ, ஜித்தன் ரமேஷ், நிஷா, சோம், கேப்ரியாலா ஆகியோர் இருந்தனர்.

இவர்கள் தங்கள் கூட்டணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே அன்பை அளிப்பார்கள் எனவும் மற்ற போட்டியாளர்களுக்கு அன்பை அளிக்காமல் கிண்டல், கேலி செய்வார்கள் என ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்,.  இந்த போக்கு பலரையும் அதிருப்தி அடைய வைத்தது.  இரு வாரத்துக்கு முன்பு இந்த கூட்டணியை சேர்ந்த  ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறினர்.

கடந்த வாரம் இந்த கூட்டணியைச் சேர்ந்த அர்ச்சனா வெளியேறினார்.  அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியும் அன்புக் கூட்டணியில் தொடர்ந்து வருகிறார்.  அதன்படி அர்ச்சனா, தனது கூட்டாளிகளான ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷாவைச் சந்தித்து ஒரு  புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.  தற்போது இதே நிலையில் பிக் பாஸ் வீட்டினுள் ரியோ, சோம், கேப்ரியாலா ஆகியோர் அன்புக் கூட்டணியைத் தொடர்ந்து வருகின்றனர்