அன்புமணி, சீ்மான் பண்ருட்டி ராமச்சந்திரன், பின்னடைவு!

--

images

சென்னை: பாமகவின் முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு பென்னாகரத்தில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

பென்னாகரம் தொகுதியில்  போட்டியிட்ட அன்புமணி ராமதாஸ், 103 வாக்குகள் வித்தியாசத்தில் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். இதனால் பாமகவினர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அதே நேரம்,  அக்கட்சி தமிழக அளவில் 4 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆலந்தூரில் போட்டியிடும் அதிமுகவின் பண்ருட்டி ராமச்சந்திரன்  பின்னடவைச் சந்தித்துள்ளார். அவருக்கு 2வது இடமே கிடைத்திருக்கிறது.

நாம் தமிழர் சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பின்னடைவை சந்தித்துள்ளார். இத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் எம். சி. சம்பத் முன்னிலையில் இருக்கிறார்.