அபுதாபியில் மூன்றாம் அரசு மொழியாக இந்தி தேர்வு

துபாய்

புதாபியில் அரபி மற்றும் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவது அரசு மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஏராளமான வெளிநாட்டவர் பணி புரிந்து வருகின்றனர்.   அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு பேர் வெளிநாட்டினர் ஆவார்கள்.  அதில் மொத்த மக்கள் தொகையில் 30% பேர் அதாவது சுமார் 26 லட்சம் பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அமீரகத்தில் அரசு விதிகள், நீதிமன்ற நடைமுறைகள் ஆகியவை அரபியிலும் ஆங்கிலத்திலும் உள்ளன.   இதை புரிந்துக் கொள்ள பல வெளிநாட்டினரால் முடிவதில்லை.   எனவே இந்த நாட்டில் மூன்றாவது அரசு மொழியாக இந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அபுதாபி நீதிதுறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மொழிகளாக உள்ள அரபி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியும் இணைக்கப்பட்டுள்ளது.   இனி அரசு உத்தரவுகள், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆகியவை இந்தியிலும் வெளியாக உள்ளன.   இதன் மூலம் இந்தி தெரிந்தவர்கள் மிகவும் பயனடைவார்கள்.

பெரும்பாலான பணியாளர்கள் இந்தியர்கள் என்பதால் தொழிலாளர் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளை அவர்களால் சரிவர புரிந்துக் கொள்ள முடியத நிலை இருந்தது.  இதனால் அவர்களுக்கு உதவ இந்தி மொழி சேர்க்கப்பட்டுள்ளது.   முக்கியமாக சட்ட சிக்கல்களில் அவர்களுக்கு இது பேருதவியாக இருக்கும்.” என தெரிவித்துள்ளது.