அப்பல்லோ வந்து திரும்பினார் கவர்னர்

வித்யாசாகர் ராவ்

ஜெயலலிதா உடல் நிலை குறித்து வேறுவிதமான தகவல்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், தமிழக பொறுப்பு கவர்னர், வித்யாசாகர் ராவ் தமிழகம் விரைந்தார்.
முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை அப்பல்லோ மருத்துவனைக்கு 12.05 மணிக்கு அப்பல்லோ வந்தார் வித்யாசாகர் ராவ்.

பத்து நிமிடங்கள் மட்டுமே மருத்துமனையில் இருந்து திரும்பினார் வித்யாசாகர் ராவ். அவர் ஜெயலலிதாவை சந்தித்தாரா, மருத்துவர்களிடம் ஆலோசித்தாரா என்பது குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
அவர் தற்போது சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறார்.

இன்னும் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள், முதல்வரின் உடல் நிலை குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரபூர்வ அறிக்கை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி