அமீர்கான், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் -க்கு அழைப்பு விடுத்த இம்ரான் கான்

பாக்கிஸ்தானின் பிரதமராக பொறுப்பு ஏற்க உள்ள இம்ரான் கான் தனது பதவி ஏற்பு விழாவிற்கு அமீர்கான், சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வாரம் நடந்து முடிந்த பாக்கிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் வெற்றிப்பெற்ற நிலையில் ஆகஸ்ட் 11ம் தேதி பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

imran-khan

கடந்த புதன்கிழமை பாக்கிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலுடன் இணைந்து பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்கவா மாகாணங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன. இதில் போட்டியிட்ட பாக்கிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 270 இடங்களுக்கு 117 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. நவாஸ் கட்சி 62 இடங்களிலும், பிபிபி கட்சி 43 இடங்களிலும் வெற்றி பெற்றன.

இந்நிலையில் பாக்கிஸ்தான் சுதந்திர தினத்திற்கு முன்பாக பிரதமராக பதவி ஏற்க இருக்கும் இம்ரான் கான் தனது பதவியேற்பு விழாவிற்கு இந்தி நடிகர் அமீர்கான், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் இரு நாட்டிற்கு இடையில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமாக இம்ரான் கான் இருப்பார் என்று நம்பப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி