அமெரிக்காவில் தஞ்சம் கோரும் 20,000 இந்தியர்கள்

டந்த 4 வருடங்களில் 20,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கலிபோர்னியாவை சேர்ந்த வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன், பஞ்சாபில் இருந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு சட்டரீதியாக உதவி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த அமைப்புக்கு  அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பு துறையால் சமீபத்தில் சில தகவல்கள் அளிக்கப்பட்டது. அதில், தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள்.

கடந்த ஜூலை மாதம் வரை , 7 ஆயிரத்து 214 இந்தியர்கள் அமெரிக்காவில் புகலிடம் கோரி விண்ணப்பித்திருக்கிறார்கள்.  இவர்களில் 296 பேர் பெண்கள்.

2014ம் வருடம், 2 ஆயிரத்து 306 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இதில் 146 பேர் பெண்கள்.

2015ம் வருடம்  2 ஆயிரத்து 971 இந்தியர்கள் புகலிடம் தேடி விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 96 பேர் பெண்கள்.

2016ம் வருடம் 4 ஆயிரத்து 88 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 123 பேர் பெண்கள்.

2017ம் வருடம் 3 ஆயிரத்து 656 இந்தியர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இவர்களில்  187 பேர் பெண்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வட அமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் நிர்வாக இயக்குநர் சத்னம் சிங் சகால், “கடந்த இரண்டு வருடங்களில் அமெரிக்காவில் தஞ்சம் கோரும் இந்தியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் குடியேற முயற்சிக்கின்றனர். இதற்காக ஏஜெண்டுகளுக்கு ரூ. 25 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சம் வரை செலவு செய்கின்றனர்”என்று குறிப்பிட்டுள்ளார்.

#20,000 #indians- #sought #political #asylum #us