Random image

அமெரிக்க வங்கியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இந்திய இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள வங்கியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்தியவை சேர்ந்த இளைஞர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞர் ஆந்திர மாநிலம், தெனாலியை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

bank-gun-shot

அமெரிக்காவின் ஒகையோ மாநிலத்தின் சின்சினாட்டி அருகே ஸ்கொயர் பகுதியில் ஃபிபத் தேர்டு என்ற வங்கியின் தலைமையகம் உள்ளது. நேற்றுமுன் தினம் இந்த வங்கிக்கு வந்த இளைஞர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவர்களை பார்த்து கண்மூடித்தனமாக சுடத் தொடங்கினார். இதில் வங்கியில் இருந்த 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை சுட்டுக்கொண்டனர். உயிரிழந்த இளைஞர் நார்த் பெண்ட் நகரை சேர்ந்தவர் என்றும், அவரின் பெயர் என்ரிக் சாந்தா பெரஸ் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது. அவர் வீட்டை போலீசார் சோதனையிட்டத்தில், துப்பாக்கி சூட்டிற்கான காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த மூவரில் ஒருவர், ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியை சேர்ந்த பிருத்விராஜ் கன்டேபி (25) எனத் தெரிய வந்துள்ளது. இவர் அந்த வங்கியில் கன்சல்டன்ட் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவரது தந்தை கோபிநாத், விஜயவாடாவில் ஆந்திர வீட்டு வசதிக் கழகத்தில் உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்ற இருவர் பிலிப் கால்டிரோன் (48), ரிச்சர்டு நிவ்கமர் (64) என அடையாளம் காணப்பட்டனர்.