அமேதியை குடும்பமாக நினைத்த ராகுல் தோல்வியால் வேதனை அடைந்துள்ளார் : ராஜ் பப்பர்

க்னோ

மேதியை தனது குடும்பம் போல நினைத்த ராகுல் காந்தி அங்கு தோல்வி அடைந்துள்ளதால் வேதனை அடைந்துள்தாக ராஜ் பப்பர் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட இரு தொகுதிகளில் அமேதி தொகுதியில் பாஜக அமைச்சர் ஸ்மிரிதி இராணியிடம் தோல்வி அடைந்தார். இது அனைத்து மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் போட்டியிட்ட 80 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இந்த தோல்வி குறித்து உத்திரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர் கருத்து தெரிவித்துள்ளார்.

ராஜ்பப்பர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்து வெற்றி பெற்றது அவருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கலாம். ஆயினும் அவர் அமேதியை தனது குடும்பமாக கருதி வந்தார். அங்கு அவர் தோல்வி அடைந்தது அவருடைய மனதில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அமேதிக்கு ஒரு அடையாளம் தந்தவர் ஆவார். தனது குடும்பத்தினரே தன்னை தோற்கடித்து விட்டதாக அவர் வருத்தம் அடைந்துள்ளார்.

இந்த தேர்தலுக்காக பிரியங்கா காந்தி மிகவும் உழைத்துள்ளார். ஆனால் மற்ற கட்சி தொண்டர்கள், உள்ளூர் தலைவர்கள், வேட்பாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு குறைந்ததால் அதற்கான தேர்தல் ஆதாயத்தை பெற முடியாமல் போய் உள்ளது. ராகுல் மற்றும் பிரியங்கா தங்களால் தேர்தல் வெற்றிக்கு எவ்வளவு பாடு பட முடியுமோ அவ்வளவு பாடு பட்டுள்ளனர். ” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி