அரசியலில் சினிமாவின் தாக்கம்!
புதிய பூமி படத்தில் எம்ஜிஆரின் கதாபாத்திர பெயர் “கதிரவன். இதற்கு அரசியல் ரீதியான காரணம் இருக்கிறது. திமுக 1967 ல் ஆட்சிக்கு வந்து 1968 ல் சந்தித்த முதல் இடைதேர்தல் தென்காசி இடை தேர்தல். அத்தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கதிரவன் என்னும் சம்சுதீன் ..
அப்போது புதிய பூமி படம் வெளியானதால் அக்கதாநாயக பாத்திரத்தின் பெயரை கதிரவன் என மாற்ற செய்தார் எம்ஜிஆர்.
அந்த படத்தில் ஜெயலலிதா அணிந்திருந்த ஜாக்கெட்டில் கூட உதய சூரியன் இருந்தது.
படமும் வெற்றி… திமுக வேட்பாளரும் வெற்றி…!