அரசு நிதி உதவி பெறும் கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு அரசை விமர்சிக்க தடை

டில்லி

ரசு உதவி பெறும் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிலைய ஆசிரியர்களுக்கு அரசை பற்றி விமர்சிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசுத் துறையில் பணி புரியும் ஊழியர்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துக் கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அரசுக்கு எதிராக எந்த ஒரு விமர்சனமும் கூறக்குடாது என விதிமுறைக்ள் உள்ளன.

அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களான ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் பணிபுரியும் பல ஆசிரியர்கள் அரசுக்கு எதிராக நடந்துக் கொள்வதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதை ஒட்டி பல்கலைக்கழக நிதி வாரியம் ஒரு புதிய அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அரசு உதவி பெறும் அனைத்து கல்வி நிலைய ஆசிரியர்களும் அரசுக்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் இயங்கும் பலகலைக் கழக அசிரியர்கள் அரசுக்கு எதிராக எந்த போராட்டத்திலும் கலந்துக் கொள்ள கூடாது எனவும் அரசுக்கு எதிரான விமர்சனங்களைக் கூறக் கூடாது என்னும் கட்டுப்பாட்டின் கீழ் வந்துளனர்.