அரவக்குறிச்சியில் சுயேட்சையாக போட்டி: காங்கிரஸ் ஜோதிமணி அறிவிப்பு

269892_2028549605764_2580740_n

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட விரும்பிய காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆகவே இத் தொகுதியில்  காங்கிரஸ் கூட்டணி கட்சியான தி.மு.க.வை எதிர்த்து சுயேட்சையாக போட்டியப்போவதாக அறிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது முகநூலில் அவர் தெரிவித்திருப்பதாவது:

“அரவக்குறிச்சி தொகுதியில் மட்டுமே போட்டியிடும் எனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை. நான் தொடர்ந்து வாக்கு சேகரித்து வருகிறேன் எனக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் அதே வேகத்தோடு முழுவீச்சில் தொடர்ந்து செயல்படும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நாம் ஒரு நேர்மையான,எளிமையான மக்களை மையப்படுத்திய அரசியலை முன்நிறுத்தி கடந்த ஒன்பது மாதங்களாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.அந்த நம்பிக்கையை நாம் எக்காரணத்தை முன்னிட்டும் இழக்கமுடியாது.

காங்கிரஸ் கட்சி சரியான முடிவு எடுக்கும் என்று நம்புகிறேன் – இவ்வாறு ஜோதிமணி தெரிவித்துள்ளார்.