அருள்கூர்ந்து இவற்றைப் பேசுங்கள்!

இரா எட்வின் அவர்களின் முகநூல் பதிவு:

 

download

த்திய அரசின் பிடியிலிருந்து கல்வியை முற்றாக மாநில ஆளுகையின் கீழ் கொண்டு வரும் செயல் திட்டம் யாரிடம் இருக்கிறது?

மதுவை ஒழித்தே ஆக வேண்டும். ஆனால் அதனால் ஏற்படும் நிதிச் சுமையை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

டாஸ்மாக்கைவிடவும் ஆயிரம் மடங்கு தீங்கு விளைவிப்பவை தனியார் பள்ளிகள். கல்வியை பொதுப் படுத்தும் எண்ணம் யாரிடம் இருக்கிறது. என்ன செய்யப் போகிறீர்கள்?

ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கு என்ன திட்டங்கள் உங்களிடம் உள்ளன?

மெல்ல அழிந்துவரும் மொழிகளில் ஒன்றாக தமிழ் இருப்பதாக கூறப்படுகிறதே. இதற்கென்ன திட்டம் இருக்கிறது உங்களிடம்?

மணல், மற்றும் கிரானைட் கொள்ளையை தடுத்து நிறுத்த என்ன செய்வீர்கள்?

பல நகரங்களில் மூத்திரம் போவதற்கு இடமற்று மணிக்கணாக்கில் அடக்கவேண்டிய அவஸ்தை இருக்கிறதே. என்ன மாற்று வைத்திருக்கிறீர்கள்?

ஒரே இடத்திற்கான பயணக் கட்டணம் ஒவ்வொரு பேருந்திற்கும் மாறுகிறதே. என்ன செய்வீர்கள்?

கடைக்கோடி குடிமகனுக்கும் அனைத்து வகையான சிகிச்சைகளுக்குமான உங்களது மாற்று ஏற்பாடு என்ன?

சாதியை ஒழிக்க முடியாது என்று ஒருவர் சொல்கிறார். உங்களது நிலைப்பாடு என்ன?
சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பேசுங்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்கள் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பொதுத் தொகுதிகளில் தலித்துகளை நிறுத்தும் தைரியம் யாரிடம் இருக்கிறது?

அருள்கூர்ந்து இவற்றைப் பேசுங்கள்!