Kamal Hassan

டிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்ற பிறகு, “சங்கத்தின் கவுரவ தலைவராக ரஜினியும், கவுரவ ஆலோசகராக கமலும் நியமிக்கப்படுவார்கள்” என்று அறிவித்தார்கள்.  மறுநாளே, ரஜினியை கடுமையாக விமர்சித்து கடிதம் ஒன்று செல்ல.. அவர் அப்செட் ஆகிவிட்டார். (இதை முதன் முதலாக பத்திரிகை டாட் காம் இதழில் செய்தியாக வெளியிட்டிருந்தோம்)   விசால் அணியினரிடம், “என் பெயரை இழுக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டார் ரஜினி.

இவரைப்போல மறைமுகமாக இல்லாமல், வெளிப்படையாகவே, “ஆலோசகர் போஸ்ட் எல்லாம் வேண்டாமய்யா” என சொல்லிவிட்டார் கமல்.

இதன் பிறகு கமலை தொடர்புகொண்ட நடிகர் சங்க நிர்வாகிகள், “சங்கத்தில் உங்களது பங்கு நிச்சயம் இருக்க வேண்டும்.  ஆகவே சங்க அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவாக இருங்கள்” என்று வேண்டிக் கேட்டுக்கொளள, நீண்ட யோசனைக்குப் பிறகு ஒப்புக்கொண்டார் கமல்.

ரஜினியையும் அறங்காவலராக்க வேண்டும் என்பது  சங்கத்தினரின் விருப்பம். ஆனால் அவரை ரீச் செய்யவே முடியவில்லை.

ஆகவேதான், “ரஜினிக்கும் சங்கத்தில் பதவி உண்டா” என்று கேட்டதற்கு, “ரஜினிகாந்த் எங்களின் மரியாதைக்குரியவர். அவரையும் எங்களுடன் வைத்து அழகு பார்ப்போம். அது எங்களுக்கு பெருமையளிக்கும் விஷயம். நடிகர்கள் பயன்பாட்டிற்கான குழுவில் அவரும் இருப்பார்” என்று மேம்போக்காக பதில் அளத்தார் விஷால்.