அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகல துவக்கம்

லங்காநல்லூர்

ன்று காலை 8 மணிக்கு உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக துவங்கியது.

பொங்கலை முன்னிட்டு ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி வீர விளையாட்டு நீண்ட நெடுங்காலமாக தமிழகத்தில் நடந்து வருகிறது. இடையில் இதற்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆயினும் போராட்டம் காரணமாக புதிய சட்டம் இயற்றப்பட்டு தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றில் மதுரை அருகே உள்ள அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றதாகும்.

இந்த ஜல்லிக்கட்டில் இந்த வருடம் பங்கு கொள்ள தமிழகம் முழுதும் இருந்து 1400 காளைகள் முன்ப்பதிவு செய்யப்பட்டுள்ளன. மாடுபிடி வீரர்கள் 848 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை இன்று காலை 7.50 மணிக்கு மதுரை ஆட்சியர் ந்டராஜன் உறுதிமொழியுடன் துவக்கி வைத்தார். காலை 8 மணிக்கு ஆட்சியர் கொடி அசைத்ததும் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

இந்த மாடுகளை பிடிக்க ஒவ்வொரு மணிக்கு 75 வீரர்களாக அனுமதிக்கப்படுகின்றனர். ஜல்லிக்கட்டை பொதுமக்கள் கண்டு களிக்க வசதியாக கேலரிகள் அமைக்கப் பட்டுள்ளன. ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி திடலில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

இந்த போட்டியின் போது அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க 10 இடங்களில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 7 ஏ எஸ் பிக்கள், 15 டி எஸ் பிக்கள் உள்ளிட்ட 1500 காவலர்கள் பணியில் உள்ளனர். அத்துடன் முதல் முறையாக இந்தோ – திபெத் எல்லை பாதுகாப்புப் படையினர் 30 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.