அவசரம்: தன்னார்வலர்கள் கவனிக்க..

dd

சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் (சுகாதாரம்) கண்ணன் ராமு, தன்னார்வலர்களுக்கு அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “சென்னையைத் துப்புரவு செய்ய தன்னார்வலர்கள் 10 – 15 நபர்கள் அடங்கிய குழுக்களாகத் தேவைப்படுகின்றனர்.

இக்குழுக்கள், சென்னையில் தாங்கள் விருப்பப்பட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்துத் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளலாம்.

இதற்குத்தேவையான அனைத்து உபகரணங்களையும் சென்னை மாநகராட்சியே வழங்கும்.
விருப்பமுள்ள செயற்குழுக்கள் 9445190996 என்ற எண்ணிற்குக் குறுஞ்செய்தி அல்லது அழைப்பு விடுக்கவும்.

தனிநபர்களாய் இந்தப்பணியைச் செயல்படுத்த இயலாது என்பதால், குழுக்களாகவே முன் வரும்படிக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

விருப்பம் உள்ள தன்னார்வ குழுக்கள் உடனடியாக  9445190996 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Leave a Reply

Your email address will not be published.