அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளிவருகிறது

avatar1

2009-ம் ஆண்டு வெளிவந்த படம் ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கிய அவதார். உலக அளவில் அதிக வசூல் செய்த படம் இது. அவதார் அள்ளிய ரூ. 17.976 கோடி ($2.79 பில்லியன்) வசூலை இதுவரை வேறு எந்தப் படத்தாலும் முறியடிக்கமுடியவில்லை.

இந்நிலையில் அவதார் படம் மேலும் 4 பாகங்களாக வெளியாகும் என அப்படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேம்ரூன் தெரிவித்துள்ளார். அவதார் 2, 2018 கிறிஸ்துமஸ் சமயத்திலும் அதேபோல அடுத்தடுத்தப் பாகங்கள் 2020, 2022, 2023 ஆகிய வருடங்களில் வெளியாகவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களாக நான்கு முன்னணி திரைக்கதையாசிரியர்களுடன் இணைந்து அவதார் படத்தின் கதை தொடர்பாகப் பணியாற்றி வருகிறேன். நான் காணும் கலை என்பது, துல்லியமான கற்பனை உலகம். முதல் பாகத்தை விடவும் சிறப்பாக அமையும். மிகச்சிறந்த காவியமாக உருவாகும் என்று அவர் கூறியுள்ளார்.

You may have missed