‘அவெஞ்சர்ஸ்; இட்ரிஸ் எல்பாவுக்கு கொரோனா பாதிப்பு…!

 

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி தற்போது வரை கொரோனாவால் 7529 பேர் பலியாகி உள்ளனர். 184, 976 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

இந்நிலையில், கரோனாவால் பாதிக்கப்படும் ஹாலிவுட் பிரபலங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.

இதை தொடர்ந்து அவெஞ்சர்ஸ் படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இட்ரிஸ் எல்பாவும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். எனக்கு கோவிட் 19 வைரஸ் காய்ச்சல் வந்திருப்பது இன்று காலை உறுதியாகியுள்ளது. இதுவரை எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. ஆனாலும் நான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். மக்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று கூறியுள்ளார்.