அ.தி.மு.க.வுக்கு 6 கட்சிகள் ஆதரவு

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை கூட்டணி தலைவர்கள் சந்தித்து அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ADMKSymbol

ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணிக்கு குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இன்று மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ஜான் பாண்டியன், மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், அப்துல் சமீது மகள் பாத்திமா முகாபர் (இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்) ஆகியோரும் தங்களது ஆதரவு அ.தி.மு.க. கூட்டணிக்கு ஜெயலலிதாவை சந்தித்து போயஸ் கார்டன் வந்தனர்.

கார்ட்டூன் கேலரி