ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர் – உயிருக்கு போராடும் வீரருக்கு அரசு உதவி செய்யுமா ?

ஆசிய போட்டியில் தங்கம் வென்ற வீரர் அரசு உதவியை எதிர்பார்த்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி பிரதிபா பட்டேல் கையால் தியான் சந்த் விருது பெற்ற ஹகாம் பட்டால் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

gold-medalist

ஹகாம் பட்டால் பஞ்சாப் மாநிலத்தின் சங்கரூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பம் நலிவடைந்து உள்ளதால், ஹகாமுக்கு தேவைப்படும் மருத்துவ உதவிகளை செய்ய அரசு முன்வந்தால் நன்றாக இருக்கும் என்று குடும்ப உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஹகால் பட்டாலின் இந்த நிலைமை குறித்து அவரது மனைவி கூறும்போது, ‘விளையாட்டு வீரர்கள் பதக்கங்களை வென்று தரும்வரை தான் அரசு அவர்களை கவனத்தில் வைத்துக் கொள்ளும். அதன்பிறகு அரசு கண்டுக்கொள்வதில்லை. இந்த நாட்டிற்காக தங்கம் வெல்லும் வீரர்களை மக்கள் ஊக்குவிக்கிறார்கள். ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மாறுபட்டதாக உள்ளது. நாங்கள் வறுமையில் உள்ளோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் கூட இல்லை, இதனால் அவரது மருத்துவ செலவை கவனிக்க முடியவில்லை ‘ என்று கூறினார்.

1978ம் ஆண்டு பேங்காங்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கமும், 1979ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஆசியன் டிராக் & பீல்டு சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கமும் வென்றுள்ளார். 2008ம் ஆண்டு விளையாட்டுத்துறையில் வாழ்நாள் சாதனையாளருக்கான தியான் சந்த் விருதை அப்போதிய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் கையால் ஹகாம் பட்டால் பெற்றார்.