ஆட்சிக்கு வருவது உறுதி : அடித்துச்சொல்கிறார் வைகோ

vaiko
மக்கள் நலக்கூட்டணியில் தேமுதிக இணைந்தது முதல் எல்லையற்ற மகிழ்ச்சியில் இருக்கிறார் அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ. விஜயகாந்த் தங்கள் பக்கம் வந்ததுமே இவர்கள் கூட்டணி வெற்றி பெற்று நிச்சயம் ஆட்சிக்கு வரும் என்று முழு நம்பிக்கை தெரிவித்து வருகிறார்.

மதுரையில் இன்று திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ‘’நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி… நாங்கள் ஆட்சிக்கு வருவது உறுதி…. ‘’என்று அடித்துச்சொன்னார்.