ஆட்சியில் இல்லை எனில் நாயும் நம்மை மதிக்காது : அமைச்சரின் அதிரடி

 

சிவகங்கை

திமுக அமைச்சர் பாஸ்கரன் ஆட்சி போய் விட்டால் நாய் கூட தங்களை மதிக்காது என அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் கூறி உள்ளார்.

நேற்று முன் தினம் அதிமுக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சிவகங்கையில் ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது.   வரும் 30 ஆம் தேதி சென்னை நகரில் நடைபெற உள்ள எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா, மற்றும் தேர்தல் குறித்து இக்கூட்டத்தில் பேசப்பட்டது.  கூட்டத்தில் தமிழக அமைச்சர் பாஸ்கரன் கலந்துக் கொண்டு பேசினார்.

அப்போது அமைச்சர் பாஸ்கரன், ”வர உள்ள தேர்தல் பணிகளில் தொண்டர்கள் ஈடுபாட்டுடன் பங்கு கொள்ள வேண்டும்.   வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்,  திருத்தம் செய்தல், ஆகியவற்றை முன் நின்று நடத்த வேண்டும்.   தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டியது மிகவும் முக்கியமாகும்.   நம்மை விட்டு ஆட்சி போய் விட்டால் நம்மை நாய் கூட மதிக்காது.” என பேசி உள்ளார்.

அமைச்சர் இவ்வாறு ஆட்சி குறித்து அதிரடியாக பேசியது தொண்டர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.