ஆட்டோ கிராப் வாங்கவந்த பெண் : தகராறில் ஈடுபட்ட பிரபல ஹாலிவுட் நடிகர்

hollywood123

கோஸ்ட் ரைடர், நேஷனல் டிரசரர் உள்பட பல ஆங்கில படங்களில் நடித்தவர் நிக்கோலஸ் கேஜ் இவர் தனது நண்பரும் பிரபல பாப் பாடகருமான வின்ஸ் நீய்ல்(55) என்பவரும் வீகஸ் நகரில் உள்ள கேளிக்கை அரங்கத்திற்கு சென்றனர். அரங்கத்திற்குள் நிக்கோலஸ் கேஜ் சென்றவுடன் அங்கிருந்த பெண் ஒருவர் ஓடி வந்து அவரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாடகரான வின்ஸ் நீய்ல் அந்த பெண்ணின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளியுள்ளார். இதனை பார்த்த அங்கிருந்து பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை பார்த்து நிக்கோலஸ் கேஜ்ஜும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக தனது நண்பரை அடித்து கட்டுப்படுத்துவது போல் கட்டிப்பிடித்து அவரை மேலும் ஆத்திரம் அடையாமல் கட்டுப்படுத்தியுள்ளார். ‘உன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த இடத்தில் பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம்’ என அவரது காதில் நிக்கோலஸ் உரக்க கத்தியதன் பின்னர் வின்ஸ் நீய்ல் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளார்.

பட்டப்பகலில் கேளிக்கை அரங்கிற்கு வெளியே உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஒருவர் தகராறில் ஈடுபட்ட சம்பவம் வீகஸ் நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.