ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு ஸ்மார்ட் போன்

சென்னை

மிழகத்தில் 108 ஆம்புலன்ஸில் பணியாற்றும் ஓட்டுனர்களில் 500 பேருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் மீதமுள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர காலத்துக்கு உதவ 108 என்னும் எண்ணுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டால் உடனடியாக ஆம்புலன்சுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.  தற்போது இந்த எண்ணில் பேசுபவர் விவரங்களைப் பெற்ற பின் அதை ஓட்டுனருக்கு கட்டுப்பட்டு அறை உதவியாளர் தெரிவிப்பார்.   ஒட்டுனர் அவர் கொடுத்த விவரத்தின் படி பாதிக்கப்பட்ட நோயாளிகளின் இடத்துக்கு செல்வார்.

இதன் மூலம் கால தாமதம் உண்டாவதாக புகார் எழுந்ததால் இதற்காக செயலி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.   அந்த செயலியின் மூலம் ஜிபிஎஸ் உதவியுடன் ஓட்டுனர்களுக்கு அந்த இடத்துக்கு உடனடியாக சென்றடைய முடியும்.   இதற்காக தற்போது ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு உதவ அரசு ஸ்மார்ட் போன்களை வழங்க திட்டமிட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி ஒருவர், “ தமிழ் நாட்டில் 930 ஆம்புலன்ஸுகள் இயங்கி வருகின்றன.   அந்த வாகனங்களின் ஓட்டுனர்களுக்கு துரிதமாக இயங்க உதவும் வகையில் ஸ்மார்ட் போன்கள் வழங்கப்பட திட்டமிடப்பட்டது.  அதன் படி 500 பேருக்கு வழங்கப்பட்டு விட்டது.  மீதமுள்ளவர்களுக்கு மிக விரைவில் அதாவது இன்னும் ஒரு வார காலத்தில் ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது” என தெரிவித்துள்ளார்.