ஆர்யா விஷால் மோதல்

r

ஆர்யா எப்போதுமே “நண்பேன்டா” பாலிசி கொண்டவர்.  ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அதிலும் விஷாலும் ஆர்யாவும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். அடா புடா என்றுதான் உரிமையோடு பேசிக்கொள்வார்கள்.

இந்த நட்பில் விரிசல் விழுந்திருப்பதுதான் லேட்டஸ்ட் சோக செய்தி.

மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் முதலாம் நினைவேந்தல் நிகழ்ச்சி காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியல் சீரியஸாகப் பேசிக்கொண்டிருந்த விஷால் திடீரென டிராக் மாறி  காமெடியாக பேச ஆரம்பித்தார்:

“அவன் இவன் படத்தின் படப்பிடிப்பில் ஒரு நாள் ஆர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, சத்தியஜித் ரே  பற்றி கூறினேன். உடனே அவர், சத்ய ஜோதி தயாரிப்பு நிறுவனத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டார்.  நிஜமாகவே அவருக்கு சத்தியஜித் ரேவை தெரியவில்லை. அந்த அளவுக்கு அப்பிராணி அவர்” என்று விளையாட்டாக விஷால் பேசிவிட்டார்.

இதுதான் விரிசலுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

“எனக்குத் தெரியாது என்பதை தனியாக என்னிடம் சொல்லியிருக்கலாம். இப்படி பப்ளிக்காக போட்டு உடைப்பதா” என்று ஆர்யா கோபப்பட்டிருக்கிறார். விஷால் கூறிய சமாதானம் எடுபடவில்லை.

“சங்க தேர்தல் முடியும் வரைக்காவது விஷால் அடக்கி வாசிக்க வேண்டும்” என்ற முணுமுணுப்பு பாண்டவர்  அணியில் கேட்க ஆரம்பித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.