spider
சிட்னி:
வெற்றிக்கு உருவம் ஒரு பொருட்டல்ல என்பது  ஆஸ்திரேலியாவில் நிரூபனம் ஆகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னியில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பேட்ரிக் லீஸ். விவசாயி.
இவரது வீட்டின் பின்புறத்தில் ஒரு கொடிய பாம்பின் தலை சிலந்தி வலையில் சிக்கி தொங்கி கொண்டிருந்ததை பார்த்தார். அதிர்ச்சியடைந்த அவர் அருகில் சென்று பார்த்தபோது பாம்பு இறந்திருந்ததை கண்டார்.
உடனடியாக கேமிராவில் அந்த காட்சியை கிளிக் செய்தார். வலையில் சிக்கிய பாம்பின் தலைக்கு கீழ் சிலந்தி நடமாடுவது அந்த போட்டோவில் தெரிந்தது.
இந்த போட்டோவை அந்த விவசாயி பேஸ் புக்கில் பகிர்ந்தார். பேஸ் புக் மூலம் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த போட்டோ. வன ஆர்வலர்கள், வன உயிரின போட்டோகிராபர்கள் மத்தியிலும் இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இரு பிராணிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் பாம்பின் தலை, சிலந்தி பின்னி வைத்திருந்த வலையில் சிக்கியிருக்க கூடும். அதன் பிறகு பாம்பு இறந்திருக்கும் எனவும் கருதப்படுகிறது.
இறந்த பிரவுன் நிற பாம்பு கடுமையான விஷத் தன்மை கொண்டது என விலங்கு அருங்காட்சியக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
வனப் பகுதியில் பல விலங்குகள் சண்டையிட்டு இறப்பதை நேஷனல் ஜாகிராபிக் சேனல்களில் பார்த்திருப்போம். ஆனால், சாதாரண சிலந்தியுடன் சண்டையிட்டு ஒரு பாம்பு இறந்திருப்பது அரிதான விஷயமாக பார்க்கப்படுகிறது.