ஆஸ்திரேலிய முன்னால் சட்டசபை உறுப்பினர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஓட்டப் பயணம்

Patfarmer1

பாட் பார்மர் என்ற ஆஸ்திரேலிய மாரதோன் ஓட்டப்பந்தய வீரர் தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ஓட்டப் பயணம் மேற்கொள்ளுகிறார். அவர் ஒரு முன்னால் சட்டசபை உறுப்பினர் ஆவார்.

அவருடைய இருபது வருட கால ஓட்டப்பந்தய அனுபவத்தில் பல முறை பல ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் ஓடி ஈட்டிய நன்கொடைகளை பல தொண்டு நிறுவனங்களுக்கு கொடுத்து உதவிஉள்ளார். அவர் கொடுத்து உதவிய தொண்டு நிறுவனங்களில் கான்செர் கவுன்சில் மற்றும் ஆஸ்திரேலியாவின் ரெட் கிராசும் அடங்கும்.

அவர் இப்பொழுது எடுத்துக்கொண்ட ஓட்டத்தின் பெயர் “ஸ்பிரிட் ஆப் இந்திய”. ஜனவரி 26 தொடங்கிய ஓட்டம் மார்ச் 30 ஸ்ரீநகரில் முடிவடையவுள்ளது. அவர் 12 மாநிலங்களைக் கடந்து செல்வதை ஒரு ஆவணப்படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த ஓட்டத்தினால் வரும் நன்கொடைகளை இந்தியாவில் உள்ள பெண் குழந்தைகளின் கல்விக்கு கொடுக்கப் போவதாக கூறியுள்ளார்.

என்ன ஒரு உண்ணதமான தொண்டு. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த ஒருவர், மற்றவர்களுக்காக உதவுவதைக் காணும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது.

-ஆதித்யா

Leave a Reply

Your email address will not be published.