இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையே பழங்கால விமானத்தை ஓட்டி பெண் சாதனை

curtis

சிட்னி:

பிரிட்டன் – ஆஸ்திரேலியா இடையிலான பழங்கால விமான பயணத்தை முடித்துக் கொண்டு தரையிறங்கினார் பெண் விமானி. பெண் விமானியான கர்டிஸ் டெய்லர் கடந்த அக்டோபர் 1ம் தேதி இங்கிலாந்து & ஆஸ்திரேலியா இடையிலான பயணத்தை 1942ம் ஆண்டில் தயாரிக்கப்ப்டட திறந்த நிலையில் உள்ள பழங்கால விமானத்தில் ஃபான்கோராவில் இருந்து தொடங்கினார். மொத்தம் 21 ஆயிரம் கி.மீ., தூர பயணத்தை முடித்துக் கொண்டு 3 மாதம் கழித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நேற்று தரையிறங்கினார்.

வழியில் வியனா, இஸ்தான்பூல், அம்மான், பாகிஸ்தான், இந்தியா, மியான்மர், தாய்லாந்து, மலேசியா, இண்டோனேசியா ஆகியவற்றை கடந்து பயணம் மேற்கொண்டார்.
53 வயதாகும் இந்த பெண் விமானி சிட்னியில் நிருபர்களிடம் சிரித்துக் கொண்டே கூறுகையில்,‘‘ முதலில் எனக்கு குடிக்க மது வேண்டும். என்று பயணத்தின் போது கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தில் சிக்கி அவதிப்பட்டேன். நான் மேற்கொண்ட இந்த பயணம் பெண் விமானிகளுக்கு மரியாதையை ஏற்படுத்தும்.

வானத்தில் பறந்தது பரபரப்பாக இருந்தது. குறைந்த உயரத்தில் பறப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும்.அதனால் இந்த பயணத்தை மேற்கொண்டேன். பாதி உலகை சுற்றி வந்ததன் மூலம் அதிசிய நிலப்பரப்புகள்,  நிலவியலை பார்க்க முடிந்தது’’ என்றார்.