இணையதள செல்வாக்கு – மோடிக்கு முதலிடம்!

22-narandra-modi1-300

உலக அளவில் இணையதளத்தில் செல்வாக்குமிக்க 30 பிரபலங்களை கண்டறிந்து அவர்களின் பட்டியலை அமெரிக்க ஏடான ‘டைம்’ வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களத்தில் முன்னணியில் இருக்கிற டொனால்டு டிரம்ப், டி.வி. நட்சத்திரம் கிம் கார்தாஷியன், அவரது கணவர் கென்யே வெஸ்ட், எழுத்தாளர் ஜே.கே. ரவ்லிங், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிட்ட பிரபலங்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த பிரபலங்களுக்கு மத்தியில் இணையதள செல்வாக்கில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் இருக்கிறார்.

இதுபற்றி டைம் ஏடு குறிப்பிடுகையில், ‘‘ உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர், இணையதள நட்சத்திரமாகவும் மின்னுகிறார். அவரை டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் 3 கோடியே 20 லட்சம்பேர் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள்’’ என கூறி உள்ளது.