இணையத்தில் வைரலாகும் STR-ன் புதிய புகைப்படம்….!

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலெடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர். சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஈஸ்வரன் படத்தின் வேலைகளை முடித்த கையேடு வெங்கட் பிரபுவின் மாநாடு ஷூட்டிங்கையும் தொடங்கினார் STR. இந்த படத்தின் இரண்டு வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்பு. இந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.