இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம்

the jan1

ஜான் ஃபேவ்ரூ இயக்கத்தில் நீல் சேத்தி என்கிற இந்திய வம்சாளிச் சிறுவன் நடித்துள்ள படம், தி ஜங்கிள் புக். டிஸ்னி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கிராபிஸ் படமான தி ஜங்கிள் புக், இந்தியாவில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வெள்ளியன்று இந்தியாவில் வெளியான இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 75 கோடி வசூலை அள்ளியுள்ளது.

இந்தியாவில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு என நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் வாரத்தில் மட்டும் ரூ. 74.08 கோடி வசூல் செய்துள்ளது. இது இந்தியாவில் வெளியான ஹாலிவுட் படங்களின் உச்சபட்ச வசூல் சாதனையாகும்.

வீக் எண்ட் எனப்படுகிற படம் வெளியான முதல் மூன்று நாள்களில் மட்டும் ரூ. 40.19 கோடி வசூல் செய்தது. இப்போது முதல் வார வசூலாக கிட்டத்தட்ட ரூ .75 கோடி வசூலின் மூலம் சாதனையை நிகழ்த்தி அடுத்ததாக ரூ. 100 கோடியை நோக்கி முன்னேறி வருகிறது.