இந்தியாவில் ஆன்லைன் விற்பனையில் அமேசான் முன்னிலை

டில்லி:

மீபத்தில், பார்க்லேஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் நிகழ்நிலை விற்பனையில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்து வந்த பிளிப்கார்ட் நிறுவனத்தை தற்போது அமெரிக்காவின் அமேசான் நிறுவனம் முந்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்த நிதி ஆண்டில் பிளிப்கார்ட்டின் மொத்த வர்த்தக மதிப்பு 6.2 பில்லியன் டாலர்களாகும். ஆனால், அமேசான் இந்தியாவின் மொத்த வர்த்தக மதிப்பு 7.5 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது.

பார்க்லேஸ்சின் மதிப்பீட்டில் பிளிப்கார்ட் குழுவின் மிந்த்ரா மற்றும் ஜபாங் ஆகியவை சேர்க்கப் படவில்லை.

இந்தியாவில் நிகழ்நிலை விற்பனையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் அமேசான் தனது விற்பனையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மின்னணு பொருட்கள் முதல் பலசரக்கு வரை பல்வேறு பொருட்களை அமேசான் விற்பனை செய்து வருகிறது.

விற்பனையில் அமேசான் முன்னிலை வகித்து வரும்போதிலும், வருவாய் அடிப்படையில், அமேசானை (3.2 பில்லியன் டாலர்) விட பிளிப்கார்ட் (3.8 பில்லியன் டாலர்) நிறுவனமே முன்னணியில் உள்ளது.

வால்மார்ட் நிறுவனமானது கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவில் பிளிப்கார்ட்டின் நிறுவனத்தின் 77 சதவீத பங்குகளை வாங்கியது. இந்தியாவில் நீண்டகாலமாக சாதனையாளராக விளங்கி வரும் பிளிப்கார்ட் நிறுவனத்திற்கும், அமேசான் நிறுவனத்திற்கும் கடும் போட்டி நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி