இந்தியாவில் கூகுள் ஷாப்பிங் சேவை!

டில்லி:

மீபத்தில் கூகுள் நிறுவனம் தனது ஷாப்பிங் சேவையை துவங்கியுள்ளது. கூகுள் ஷாப்பிங் – அதிவேக மற்றும் மேம்பட்ட ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக தளம்.

கூகுள் நிறுவனத்தின் இந்த ஷாப்பிங் சேவையில் ஒரே நேரத்தில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் உள்ள பொருட்களைத் தேடி, ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பின்பு தேவையான அனைத்துப் பொருட்களும் இந்த கூகுள் ஷாப்பிங் தளத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட், அமேசான் போன்ற பெரிய நிறுவனங்கள் மட்டும் இல்லாமல், சிறு இ-காமர்ஸ் தளங்களில் விற்பனை செய்யப்படும் பொருட்களையும் கூகுள் நிறுவனம் தற்போது பட்டியலிடுகிறது.

மேலும், இந்த வலைதளம், ஒரு ஆன்லைன் ஷாப்பிங் தேடுதல் பக்கமாக மட்டும் இல்லாமல், அதிகளவு விற்பனையாகி வரும் டிரெண்டிங் பொருட்களையும் பட்டியலிடும்.

ஷாப்பிங் சேவை தற்போது ஒரு சோதனை முயற்சி எனபதால் கூகுள் அதன் மூலம் வருவாய் ஈட்டும் எந்தத் திட்டங்களையும் அமல்படுத்தவில்லை. ஆனால் வரும் காலத்தில் இதன் மூலம் வருவாய் ஈட்டும் திட்டமும் கூகுளுக்கு உண்டு.