இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81.36 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 81,36,166 ஆக உயர்ந்து 1,21,681 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 48,117 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 81,36,166 ஆகி உள்ளது.  நேற்று 550 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,21,681 ஆகி உள்ளது.  நேற்று 59,005 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 74,30,911 ஆகி உள்ளது.  தற்போது 5,82,160 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 6,190 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,72,858 ஆகி உள்ளது  நேற்று 127 பேர் உயிர் இழந்து மொத்தம் 43,837 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,241 பேர் குணமடைந்து மொத்தம் 15,03,050  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,886 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,20,565 ஆகி உள்ளது  இதில் நேற்று 17 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,676 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,623 பேர் குணமடைந்து மொத்தம் 7,88,375 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,589 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,20,398 ஆகி உள்ளது  இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 11,140 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 8,521 பேர் குணமடைந்து மொத்தம் 7,49,740 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,608 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆகி உள்ளது  இதில் நேற்று 38 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,091 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,924 பேர் குணமடைந்து மொத்தம் 6,87,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 2,187 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,80,082 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,007 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,590 பேர் குணமடைந்து மொத்தம் 4,48,644 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.