இந்தியாவில் தஞ்சம் புகும் அகதிகளுக்கான குடியுரிமை விதிகள் எளிதாக்கப்படும்: மேகாலயா உயர் நீதிமன்றம்

ஷில்லாங்:

பாக்கிஸ்தான், வங்காளம் மற்றும் ஆப்கானிஸ்தாலில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், ஜெயின்ஸ், பௌத்தர்கள், பார்சிஸ், கிரிஸ்தவர், காசிஸ், ஜெயின்டியாஸ் மற்றும் காரோஸ் ஆகியோருக்கு எந்த கேள்வி அல்லது ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை வழங்குவதற்கான சட்டத்தை கொண்டு வர பிரதமர், சட்ட அமைச்சர் மற்றும் பாராளுமன்றத்திற்கு மேகாலயா உயர் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், கிறித்தவர்கள், பார்சிஸ், காசிஸ், ஜெயின்டியாஸ் மற்றும் கரோஸ் ஆகியோர் இன்றும் மூன்று அண்டை நாடுகளில் சித்திரவதை செய்யப்படுகின்றனர்.

2016-ம் ஆண்டின் மத்திய அரசின் குடியுரிமை (திருத்தப்பட்ட) மசோதாவின் படி, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அல்லது பாக்கிஸ்தானில் இருந்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், ஜெயின்ஸ், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் ஆறு ஆண்டுகள் தங்கிய பின்னர் இந்திய குடியுரிமை பெறும் தகுதி பெறுகின்றனர். ஆனால், தற்போது வந்துள்ள நீதிமன்ற உத்தரவில் இந்த மசோதா குறித்து எதுவும் குடிப்பிடப்படவில்லை.

மேகாலயா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “இந்துக்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், பௌத்தர்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், காசிஸ், ஜெயின்டியாஸ் மற்றும் கரோஸ் ஆகியோர் எந்த நாளில் இந்தியாவிற்கு வந்திருந்தாலும் அவர்களை இந்திய குடிமக்களாக அறிவிக்க வேண்டும். மேலும், எதிர்காலத்தில் வருபவர்களும் இந்திய குடிமக்களாக கருதப்பட வேண்டும்.”

இந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் எந்த நேரத்திலும் இந்தியாவில் குடியேற அனுமதிக்கப்படலாம் என்றும், அரசாங்கம் முறையாக அவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து அவர்களை இந்தியாவின் குடிமக்கள் என்று அறிவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.