இந்தியா : இதுவரை  16.11 கோடி கொரோனா சோதனைகள்

டில்லி

துவரை நாட்டில் 16,11,98,195 கொரோனா சோதனைகள் நடந்துள்ளன.

இதுவரை இந்தியாவில் 18.07 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 1.45 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். இந்தியாவில் எந்த ஒரு கொரோனா தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்படாமல் உள்ளது.  தற்போது வரை இந்தியாவில், அறிகுறிகள், கண்டறிதல், சோதனை, தனிமை ஆகிய முறையில் மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் இதுவரை இந்தியாவில் நேற்று வரை 16,11,98,195 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 11,07,681 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.   சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில்  இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.