இந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 84 ரன்களே தேவை

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில் இந்திய அணியின் பந்து வீச்சுகளை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 180 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 2ம் நாள் ஆட்டத்தின் தொடக்கமாக இந்திய அணி வெற்றிப்பெற 84 ரன்கள் வேண்டும் என்ற நிலையில் விளையாடி வருகிறது.

Virat-Kohli-Dinesh

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளயாடி வருகிறது. முதல் டெஸ்ட் தொடர் பர்மிங்ஹாமின் எட்பாகஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 274 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் கடந்து 149 ரன்களை எடுத்தார். இதன் மூலம் 22டெஸ்ட் சதத்தை வீராட் பதிவு செய்தார். 2ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் இங்கிலாந்து அணியின் கியட்டன் ஜென்னிங்ஸ், ஜோ ரூட் ஆகியோர் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கிய நிலையில் சரிவை மட்டுமே சந்தித்த இங்கிலாந்து அணியின் ஜென்னிங்ஸ் மற்றும் ரூட் அஸ்வினின் சுழற்பந்துக்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து டேவிட் மலான்,ஜானி, பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் இஷாந்த சர்மாவின் அபாரமான பந்து வீச்சுக்களை சமாளிக்க முடியாமல் ஆட்டமிழந்தனர். 42 ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 131 ரன்களை எடுத்தது. அதன்பிறகு உமேஷ் யாதவ் வீசிய பந்தில் அடில் ரஷீத் போல்ட் அவுட்டாகி வெளியேறினார். இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

தேனீர் இடைவேளைக்கு பிறகு இந்திய அணி தொடக்க அட்டக்காரர்களான முரளிவிஜய், ஷிகர்தவன் ஆகியோர் களமிறங்கினர். ஸ்டுவர்ட் பிராட் பந்தில் 6 ரன்களுடன் முரளி விஜயும், 13 ரன்களுடன் தவனும் வெளியேறினர். அதன் பிறகு களமிறங்கிய ஸ்டோக்ஸ் பந்தில் ராகுலுடன், ஆண்டர்சன் பந்தில் அஸ்வினும், கரன் பந்தில் ரஹானேவும் வெளியேறினர். ஆட்டநேர முடிவில் கோலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 36 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 110 ரன்களை எடுத்துள்ளது. இன்னும் 2 நாள்கள் உள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற 84 ரன்கள் தேவைப்படுகிறது.