இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் இந்த நாடுகளில வாகனம் ஓட்டலாம்!

வெளிநாட்டு சுற்றுலா செல்பவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று, அங்கு நமக்கென்று வாகனம் அமைந்தாலும் நாமே அதை ஓட்ட முடியுமா.. சுதந்திரமாக ஊர் சுற்ற முடியுமா என்பது.

ஆனால் இதற்கு ஒரு தீர்வு இருப்பது வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பலருக்குத் தெரிவதில்லை.

ஆம்.. இந்திய வாகன ஓட்டுநர் உரிமத்தை வைத்துக்கொண்டு பதினோரு நாடுகளில் வாகனங்களை ஓட்டலாம்.

அவை எந்தெந்த நாடுகள் என அறிந்து கொள்வோமா?

இந்தியர்கள் தங்களது இந்திய லைசென்ஸை வைத்து அமெரிக்காவின் பல மாநிலங்களில் தங்களது கார்களை இயக்கலாம். ஆனால் ஒருவருடம் வரை மட்டுமே இந்த அனுமதி கிடைக்கும். தவிர, இந்த ஓட்டுநர் உரிமம், ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். மேலும் ஓட்டநர் உரிமம் நடப்பில் இருக்க வேண்டும்.

இதேபோல பிரான்சிலும் இந்திய நாட்டின் ஓட்டுநர் உரிமம் வைத்து கார்களை ஓட்டலாம். இங்கும்  ஒருவருட காலம் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மேலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை ஒருவருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

நார்வே நாட்டில் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்தி 3 மாதங்கள் வாகனங்களை வாகனங்களை ஓட்ட முடியும்.

இயக்க முடியும்.

சுவிட்சர்லாந்து நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமமத்தை ஒரு வருட காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஓட்டுநர் குறைந்தது குறைந்தபட்சம் 21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். ஜெர்மன், சவுத் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை பயன்படுத்கிக் கொள்ளலாம்.

அதேசமயம் குறிப்பிட்ட வாகனங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். தவிர இந்த ஓட்டுநர் உரிமத்தை தொழில் ரீதியாக பயன்படுத்த முடியாது. அதாவது கார் ஓட்டுநராக தொழில் செய்ய முடியாது. சுற்றுலாவுக்காக தங்கள் சொந்த பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த அனுமதி.

 

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 11 countries where you can drive around with an Indian Driving License, இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் இந்த 11 நாடுகளில வாகனம் ஓட்டலாம்!
-=-